கன்னல் தமிழென்று போற்றிடுவார்
கலக்கல் பலவும் புரிந்திடுவார்
கன்னித் தமிழென்று பேசிடுவார்
கற்புடன் வைத்திட தவறிடுவார்
தனித்தமி ழென்று வாதிடுவார்
தன்னந்தனியே விட்டுச் சென்றிடுவார்
அன்னைத் தமிழென்று பறைந்திடுவார்
துதித்து தொழுதிட மறந்திடுவார்
முத்தமி ழென்று அளந்திடுவார்
மொத்தமாக பற்றை துறந்திடுவார்
பொற்றமிழ் என்று புகழ்ந்திடுவார்
மாற்றுமொழிதனில் உரை நிகழ்த்திடுவார்
நற்றமிழ் என்று நவின்றிடுவார்
நாவில் மற்றதை பழக்கிடுவார்
செந்தமிழ் என்று செப்பிடுவார்
சீர்பதங் குலைக்க செய்திடுவார்
பைந்தமிழ் என்று பாடிடுவார்
தமிழுரை கேட்பின் ஓடிடுவார்
வண்டமிழ் என்று வரைந்திடுவார்
வரவேற்க உள்ளந் தளர்ந்திடுவார் 

அருள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.