காற்றினுள் சிறு கீற்றெனப்
More articles by குட்டி ரேவதி
- பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி (28 செப் 2011)
- ஒரு வார்த்தை சொல்லேன்! (26 செப் 2011)
- உடலை எழுதுதலும் வாசித்தலும் (பாலியல் அறம் மிக்க பிரதியாக) (21 பிப் 2011)
- நம் காலத்துக் கேள்வி (20 மே 2010)
- வனதேவதை (07 மே 2010)
பறந்து சென்றது மாலைவேளை
வார்த்தைகள் இறுகிக்கிடந்தனவீழ்ந்த எரிநட்சத்திரம் குளிர்ந்ததைப்போல்
உணர்வுகள் பேதலித்துத் தவித்தன
பாத்திரத்திற்குள் தவறி விழுந்த பல்லியினும்
அதிகமாய்
பிரபஞ்சத்தின் இறுதிமலரைப் போன்ற
பாவனையுடன் உதிர்ந்தது
அம்மலர்
இப்படியாக நெருங்கும் இரவின்
அசைவைப் பார்க்கையில்
காலம் ஒரு சிறகெனக் கனக்கிறது
- குட்டி ரேவதி