பொலபொலவென விடியும்
மடல்களின் காலைவேளை

Morningஏக்கங்களின் சமுத்திரம்
சாம்பல் வழிய விரிந்தது வானமாய்

‘என் வேட்கைப்பேராற்றின்
சில கணச்சரிவில் வெடித்துச் சிதறும்
சிறு குமிழி
உன் ஆணவம்’ என்றாள்
பனிநீரில் நின்றவாறு
சாதகத்திற்கு வந்தவள் முன்
குளிர் விறைத்து நின்றது

குட்டி ரேவதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.