Sad manஉயிர் மெய்

அதனின் சுவை அதற்கு
அதிர்சியளிப்பதாக இருந்தது
அதன் பிடியிலிருந்து
நழுவும் எண்ணம்
ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது
எப்பொழுதும்

தொடர முடியாத
உறவின் சலிப்பிலிருந்து...
வெளியேறின மொழியால்
அவரவர்களுக்கான உன்னதங்களை
படைத்துக் கொண்டன; அவைகள்
காதல் கடவுள் சமூகம் இயந்திரம்
மனிதமாய்...


தமிழ்

கிளர்ந்தெழுகிறேன்
உங்களால் வெளிப்படுத்தப்பட்ட காதலால்

வார்த்தைகளாயிற்று
என்னுடைய குரோதம்
உங்களுடைய பிரியத்தால்

உணர்கிறேன்
உங்களுடைய அதிர்வுகளை
பிரதிபலிக்கிறது சூழலின் உண்மை

சுவாசிக்கிறேன்
நெருக்கமாக உங்களின்
எழுத்து வடிவத்தை 

தங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.