என் தேவதை
Ladyஅவள் தோழியோடு
தேநீர் அருந்த
வருகிறாள்.

அவள் கரம்
பிடிக்க காத்துக்
கிடக்கின்றன
தேநீர்க் கோப்பைகள்.

எல்லா கோப்பைகளையும்
ஏமாற்றி விட்டு
ஒரு கோப்பைக்கு
மட்டும் உயிர்
கொடுக்கிறாள்.

அவள் பிஞ்சு
விரல் தொட்டு.
அவள் உதடு
பதித்து உறியும்போதெல்லாம்
தீர்ந்து போவது
தேநீர் மட்டும்
அல்ல,
என் உயிரும் தான்.

அவள் அதரம்
தொட முடியாத
சோகத்தில்,
தேவதையின் தோழி
கரத்தில் இருந்து
தற்கொலை செய்து
கொள்கிறது
இன்னொரு கோப்பை.

இதைப் புரிந்து
கொள்ள முடியாமல்
"கை தவறி
விழுந்து விட்டது"
என்கிறார்கள்.

அவளோ கோப்பைக்குள்
இருக்கும் தேனீரைப் பருக,
கோப்பையோ அவள்
எச்சிலை அமுதமென
எண்ணிப் பருகுகின்றது.

மலருள் இருக்கும்
தேனை பட்டாம்பூச்சி
பருகுவது இயல்பு.
ஆனால் இங்கு
பூவே அல்லவா
தேனைப் பருகுகிறது?

இன்னொரு பிறவி
இருந்தால் எப்படியாவது
கோப்பையாய் பிறந்து
விட வேண்டும்.
என் தேவதையின்
இதழ் ஈரம்பட.

அதற்குள் முடிந்து விட்டதா?
தேவதையின் தேநீர் திருவிழா.

காத்து இருக்கிறேன்.
தேவதையின் இன்னொரு
திருவிழாவிற்காக. 

உதயகுமார்.ஜி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It