சாடீன் சிறகுகளுடன்
More articles by ஷைலஜா
- ’ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம் (30 ஜன 2014)
- முத்தம் மட்டும்... (01 அக் 2013)
- நிழல்கள் மட்டும்... (30 ஏப் 2012)
- என் பெயர் வசந்தம் (13 ஜூலை 2011)
- கடைசி சந்திப்பு (19 ஆக 2010)
வெள்ளி கிரீடமுடன்விழிகளை மூடியபடி
பறக்கிறேன்
திடுமெனக் கேட்ட ஒலியில்
விழிப்பு வந்துவிட
வீட்டில் கோரைப்பாயில்
பாதி படித்துவிட்டுப்போன
சின்ட்ரெல்லாவை
அணைத்துப்
படுத்திருக்கிறேன்
சாடீன் சிறகுகளுடன்
பறந்த நான் தேவதையா
தேவதைகள் பற்றிக் கனவு காணும்
மனுஷியா
நாளை பறக்க நேரிட்டால்
இரண்டில் ஒன்று
உறுதியாகிவிடும்!
- ஷைலஜா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )