பறவை தன்
உடலை
உதறும் போது
உதிர்கின்ற சருகுகள்

மௌன‌மாக‌ எழுதுகின்ற‌ன‌
பிரிவின் வ‌லியினை.

என்னைப்போல‌வே…

மிருகம்

அவன் வெளிக்காட்டுவதெல்லாம்
கோபம்,துரோகம்,பொறாமை
இவை மட்டுமே.

நான் வெளிக்காட்டுவதெல்லாம்
புன்சிரிப்பு,பணிவு,அடக்கம்
இவை மட்டுமே..

..மேலும் நாங்கள் இருவரும் ஒருவரே

முத்த தூறல்கள்

ஒரு மழைக்கால மாலை நேரம்.
கையில் தேனீர் கோப்பை.
ஜன்னலை தழுவும்
மழையை ரசிக்க‌
அருகே சென்றேன்.

ஜன்னலின் இடுக்கு
வழியே
முகத்தை முத்தமிட்ட‌
தூறல்கள் அனைத்திலும்

க‌ரைந்திருந்த‌து
உன் பெய‌ர்..

- அய்யப்பராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It