More articles by எம்.ரிஷான் ஷெரீப்
- ஜப்பான் பேனா நண்பி - இஸீரு சாமர சோமவீர (01 பிப் 2012)
- அரசியல் (16 மே 2011)
- ட்ரோஜனின் உரையாடலொன்று (24 பிப் 2011)
- மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...! (24 ஏப் 2010)
- விதிக்கப்பட்ட மரணம்! (23 ஏப் 2010)
எப்பொழுதும் மெய்யுரைக்குமுன்
கருவிழிகளில் தொலைந்தேனா
கருந்திரவ நீர்வீழ்ச்சியொத்தவுன்
நீள்கூந்தலில் மூழ்கிப் போனேனா
எப்பொழுதும் பரவசப்படுத்தும்
இதழ் நகையில் திருட்டுப் போனேனா
எல்லாம் நல்லதெனும்
நற்குணத்தில் புதைந்தேனா
எதிலுன்னிலீர்க்கப்பட்டேன்
பூவென்றெண்ணி உன்னில் மொய்த்த
வண்ணத்துப்பூச்சிகளைத் தென்றல் தினமுமுன்
சுவாசங்களோடு அழைத்துவருகையில்
அவற்றின் மயிர்க்கால்களைத் தொட்டு
உன் வாசனை மகரந்தங்களை முகர்ந்தபடி
நம் காதலின் வண்ணங்கள் சிலவற்றை
அவற்றுக்குக் கடனாகக் கொடுத்திருக்கிறேன்
நாளை வரும்போது மறவாமல் கேட்டு வாங்கிக் கொண்டு
ரோசாப் பூக்களையொத்த உன்
இதழ்ப் பூ, நகப் பூ வண்ணத்தினை மட்டும்
எனக்குத் தூதனுப்பு
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )