Rain
நீர்க்குமிழ்கள் வெடித்து தெறித்த

More articles by பிச்சி

துளிகளாக கண்களை சிமிட்டுகிறது
இரவைச் சிலுப்பிய பகல்.
ஒயிலரங்க மேடைக்கு
ஒளிவித்து.

மழை உசுப்பிய மணத்திற்கும்
முதிர் மறைத்த விழிகளுக்குமிடையே
கங்கணம் கட்டுகிறது மின்னல்
கூரை அலங்காரி.

நுரை சலத்த நீரும்
அகில் மண்டிய வானும்
ஒயிலரங்க மேடைகள்

அந்தி பொழிந்த வர்ணச்சுடரால்
நாடக நொடிகள் பிறழ்ந்து போவதில்லை
கொடியறுந்திடா இளம்பிஞ்சின்
மொழியே போல.

ஆங்காங்கே தொடர்மழையாய்
நாடகம் நடந்துகொண்டிருக்க,

ஒருவருமில்லாமல்
காட்சிகள் நகர்த்திக்
கொண்டிருக்கிறது
ஒயிலரங்கம்.


பிச்சி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.