ஆரம்பத்தில்
காட்சிகள் அப்படியே இருந்தன
காட்சியின் ஓரத்தில்
ஒரு கவிதை விமர்சனக் கைகளில்
சொருகி வைக்கப்பட்டிருந்தது
மறு ஓரத்தில்
கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும்
ஒரு சிறுவனின் சித்திரம்

நொடிமுற்கள் வெகுதூரம் ஓடிவிட்ட காலத்தில்
காட்சிகள் நீட்சியடைகின்றன
காலமாற்றத்தில் காட்சி மாற்றம்

கவிதை தொங்கி விமர்சனப் பிடியை நழுவவிட்டது
கற்கள் நீண்டு மலைகள் ஆகி,
சிறுவனை நசுக்கியது.

நொடிமுற்கள் இன்னும் ஓய்வெடுக்கவில்லை
காட்சிகள் மாறுகின்றன மீண்டும்.
ஆரம்பத்தில் கண்ட காட்சி
இறுதியிலும் அப்படியே தான் இருந்தது.


- ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It