பிரியங்கள் நிறைத்த
வார்த்தைகள் கொண்டு
ஒரு கவிதை வேண்டும்
என்றாய்...

பொய்யும் புகழும்
வார்த்தைகள்
பயணப்படுகின்றன
என்னிடமிருந்து...

விஷம் தோய்த்தும்
விஷமம் தோய்த்தும்
பேசிய நாட்களைத்தவிர
விடுபட்ட எல்லா
நாட்களிலும் எழுதப்பட்ட
உனக்கான கவிதைகளை
தர ஆசைதான்..

கவிதைக்கு பொய்யழகு
என்பதாலேயே
விலகி ஓடுகின்றன
விடுபட்ட நாட்களின்
வார்த்தைகளின் நிஜங்கள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.