உதறிச் செல்..

உதாசீனப்படுத்து..

எடுத்தெறி..

எதிர் நின்று கொல்..

ivalbharathi_ladyகைவிடு..

கடந்து போ..

விட்டொழி..

விரட்டியடி..

இத்தனைக்கும்

தாக்குபிடித்தால் பற்றிக் கொள்..

ஒருவேளை அந்த நேசம் உனக்காகவே

படைக்கப்பட்டிருக்கலாம்..

 

--------------

 

வேறெதிலும்

பதிய மறுக்கும் கவனம்

முழுமையும்

சுற்றி வருகிறதுன்னை..

கொஞ்சம்

ஆற்றுப்படுத்திச் செல்லேன்..

நானும்

என் நேசமும்

இம்மியளவேனும்

நலம் பெற..

 

-----------------

திட்டமிடப்படாத

பயணத்தில்

களைப்படுகிறது என் தேடல்..

 

வகைப்படுத்த இயலாத

முயற்சிகளின் எத்தனிப்புகள்

நின்றபாடில்லை..

 

தேற்றுதலில்லாத

உழைப்பின்

ஒவ்வொரு சொட்டும் உலர்கிறது..

 

உன்னுடனான பொழுதுகளில்

அனிச்சையாய்

எழுந்து மறைகிறது

ஒரு முடிவுக்கான சமரசமும்..

ஒரு தொடக்கத்திற்கான ஒப்பந்தமும்..

 

-----------------------------

 

அனுமதி

மறுக்கப்படும்

உன் தனிமைக்கு..

 

அனுமதித்தும்

ஆர்ப்பரிக்கும்

உன் அமைதி..

 

இரண்டுமற்ற பொழுதுகளில்

உன் நினைவிலறைந்து போகும்

எனது வார்த்தைகள்..

"பிறிதொரு ஜென்மம் இல்லை..

வாழ்ந்து விடலாம் இக்கணமே"

 

-     இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
Sahaana
புரிந்துகொள் நண்பா மறக்க நினைக்கும் பல விடயங்கள் அடிக்கடி விரட்டிக் கொள்கிறது என்னை அதில் நீயும் ஒருவன் காதலின் உணர்வு தெரியுமா உனக்கென்றாய் பாவம் நீ எங்கே தெரியப்போகிறது என் காதலின் அஸ்தமனத்தை புரியாத என் உணர்வுகளை தினமும் சீண்டிப் பார்க்கிறாய் உன் எஸ் எம் எஸ்கள் மூலமாக விளையாட்டுப் பிள்ளையென ஒதுங்கித்தான் பார்க்கின்றேன் நீயுமோ விட்டபாடில்லை வெளிநாட்டு கலாசாரத்தில் மூழ்கிய உன்னிடம் என் கிராமத்து உணர்வுகளை புரிய வைக்க முடியவில்லை பெறுமதியான வார்த்தைகளை இலகுவாக சிந்திவிடுகிறாய் அள்ளுவது நான் என்பது தெரிந்தும் என்னவனின் நினைவுகளால் துவள்கின்ற நேரத்திலும் போட்டிடுவாய் எஸ் எம் எஸ்களை அவனைப்போன்றே விம்மியழ முடியவில்லை பக்கத்தில் அம்மா பொத்திக்கொள்கிறேன் நெஞ்சை புரியாது உனக்கு காதலின் வலியது நிறுத்திக்கொள் என்றால் சிரித்துக்கொள்கிறாயடா இனியும் தாங்காது இச்சின்னவளின் இதயம் முடிந்தால் புரிந்துகொள் நண்பா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.