அன்பின் வெகுமதியை
இவ்வளவு வெகுமதியை
இவ்வளவு கல்லடி வாங்கி
வாங்க வேண்டுமா?
உன் காயத்தின்
சுவடெங்கும்
நீண்டு கிடக்கிறது
உன் தொப்புள் கொடி
அறுத்த ரணம்
இருந்தும்
அந்த ரண சகிப்பின்
கனிந்த புன்னகை
மட்டும் உன் முகத்தில்
எப்படி என்று என்று
தேடிக் கொண்டிருக்கிறேன்
தேடும் போதெல்லாம்
விழுகிறது ஒரு
கண்ணாடிச் சில்லு
பொறுக்கி ஒட்ட வைக்கிறேன்
அகோரமாகி விடாமல்
உன் அன்பின் பிம்பம்
நிலைத்துத் தெரிய
- மாரி.கிருஷ்ணமூர்த்தி