சொற்களைப் புதைத்து விடும்
மயானமொன்று
தொண்டைக் குழிக்குள் இருக்கிறது

கோபத்தைக் கொன்று விடும்
மயானமொன்று
உச்சந்தலையில் இருக்கிறது

கொன்று குவித்தவைகளை
எரியூட்டும் தகன மேடை
இதயத்தில் இருக்கிறது

மூச்சு விடவும் நேரமற்று
மூவிடத்திற்கும் அணிவகுத்துச் செல்கின்றன
உயிரற்ற உடலங்கள்

உயிரற்றவைகளின் மேல் நின்று
ஆனந்த தாண்டவம் ஆடுகிறோம் நாம்

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.