modern art 316அன்று காணாமல் போன
அந்த சொல்லை மட்டும்
இன்று கண்டுபிடிக்க நேர்ந்தால்
நாம் இப்பொழுது
ஓர் அந்தியை சிருஷ்டிக்க இயலும்

சுவரில் பதுங்கிப் பதுங்கிப் போகும்
சங்குப் பூனையையும்
அதன் நிழலையும்
சேர்த்தே படைக்க முடியும்

வெண்கொத்து நாரைகளை
சரியான பாதையில்
திசை திருப்பி விட முடியும்

மனதில் ஒடிக்கொண்டேயிருக்கும்
அந்த நதியை
சுதந்திரமாகவே விடுவித்து விடலாம்

மீண்டும் நீ ஆழமான
புன்னகை சிந்தும் போது
நான் சொல்வேன்

"கண்ணே என்னையும்
ஒரு சொல்லாக மாற்றி
காலத்தை முன்னும் பின்னுமாக
நகர்த்திக் கொண்டேயிரு" என்று

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.