1

தன்னைத்தான் பார்த்து
ரசனையில் கொத்தலாம்
தன் உருவம் வாய்க்கப் பெற்ற
பிறரை
அடையாளம் கண்டு
அகமகிழவும் கொத்தலாம்
உள்ளே ஒளிந்திருக்கும்
தன்னை வெளிக்கொணரவும்
இருசக்கர வாகனத்தின்
கண்ணாடியை
தரிசிக்க வரும்
புல்புல்லிடம்
கண்டடைகிறேன்
தேடலின் ஓயாமையை.

2

கூண்டிலடைத்த பறவையின் தவிப்பும்
கூடு தொலைத்த கிளையின் தவிப்பும்
பறவை காணாத
இருசக்கர வாகனத்தின்
கண்ணாடியின் தவிப்பும்
இலையுதிர் மரத்தின்
உயிர்ப்பைப் போல.

- இளையவன் சிவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.