கல்வி வியாபாரமாகி விட்டது
மதம் வியாபாரமாகி விட்டது
கலை வியாபாரமாகி விட்டது
அரசியல் வியாபாரமாகி விட்டது
நாடும் உலகமும் மனிதமும்
வியாபாரமாகி விட்டன

யாவும் எவையும்
வியாபாரமாகி விட்ட
இந்த உலகத்தில்
அன்பின் நிமித்தம்
நான் எதை உனக்கு பரிசளிப்பேன் ?

வேண்டுமானால்
இன்னும் வணிகமயாமாகி விடாத
இந்தக் கவிதையின்
ஒரு நல்ல பகுதியை தேர்ந்து
நீ எடுத்துக் கொள்கிறாயா?

- தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.