கொடுவெயில் கண்டு அஞ்சாது
பூத்து நிழல் விரித்து நிற்கும்
சாலையோர புங்கன் மர அடியில்
கம்மங்கூழ் விற்கிறாள்
நிலமிழந்து பெருநகர் ஏகிய
பாட்டி ஒருத்தி
பல மடிப்புகளாய்
காலத்தின் தோல் சுருக்கியிருக்கும்
அவள் மணிக்கட்டில் சிரிக்கும்
ரப்பர் வளையலில் குதித்து
எண்ணெய் பிசுக்கேறிய மூக்குத்தியில் விளையாடி
கூழ் குடிப்போரின் கழுத்தில்
குரல்வளையில் வழிகிறது
கோடை காண்

- சதீஷ் குமரன்

Pin It