கடும்
வெயிலின் தகிப்பை உள்வாங்கி
அனல் வீசும்
பாலைவன மணற்பரப்பாய்
வாழ்க்கைப் பாதை அவனுக்கு ...

இருண்ட பயணத்திற்கு
அவன்
கைவிளக்காய் கவிதை
அவனுள்
எப்போதும் உறங்குகிறது

சொற்களைத் தாளகதியற்ற
மந்திரப் பரப்பில்
நிலைநிறுத்துவதும்
சொற்களின் புன்னகையைக்
கவிதை முழுவதும்
பரவச் செய்வதும்
அவனுக்குக் கடினமல்ல

மௌன வெளியின்
முணுமுணுப்பில்
வெற்றியைச் சொல்லும்
காலத்தின் குரல் அவன்.

எப்போதோ
தொடங்கிய பயணம்
இன்றும் தொடர்கிறது
கவிதை
அவன் கைவிளக்காக...

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It