விடிந்தது கூட
தெரியாமல்
நடைபாதையில்
தலைபொதியோடு
படுத்துக் கிடந்தவனை
விரட்டிவிட்ட
காவல்துறைக்குத்
தெரியவில்லை
அவனுக்கு
விடியவில்லை என்பதும்
அவனை வீட்டோடு
விரட்டி விட்டோமென்பதும்

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.