More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
- வலி (10 செப் 2025)
- மரம் (29 மே 2023)
- நாணயம் குறைந்த நோட்டு (17 ஏப் 2023)
- வலி (20 ஜூன் 2012)
- நா தழுதழுத்தது (20 அக் 2011)
விலாசம் இல்லாமல்
நீ எழுதிய
கடிதத்தில்
மழைத்துளி சிந்திய போதுதான்
முடிந்திருக்க வேண்டும்
என் வாழ்க்கை!
விழுந்து விரிந்த
துளியின்
வலப்புற முடிவில்
"எப்படியாவது வந்து கூட்டிப் போ"
எங்கென்று குழம்பிய
நாட்களை
நினைவு படுத்திக்கொண்டே
முகம் சுளிக்கிறேன் -
ஒளிந்து விளையாட
கூப்பிடும் மகனிடம்.
-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (