அவ்வப்போது
More articles by கருவை ந.ஸ்டாலின்
- கோடிட்ட இடத்தை நிரப்பு (11 டிச 2023)
- நிறப்பிரிகை (27 ஏப் 2022)
- பருகல் (22 டிச 2021)
- தின்னும் பசி (17 டிச 2021)
- வெண்ணிற இரவு (12 நவ 2021)
அடிக்கடி
சும்மா சும்மா
எப்படியேனும் வைத்துக் கொள்ளுங்களேன்
சொல்லிக் கொள்ளாமல்
வந்து தொலைந்துவிடுகிறது
இப்பிசாசு
வழக்கமாய்
நீங்கள் வகுத்து வைத்த
எச்சூத்திரமுமின்றி
நான் நினைக்கும்
அதுவாகிறது
அது.
கோமகன் காது கழுதைக்காது
தொட்டு
பஷீரின் பால்யகாலசகி வரை
ஒன்றையும்
விட்டுவைக்காத நவீனக் கோணங்கி
எப்படியோ
தொற்றிக் கொண்டது
தோளில்
முழுவதும் கொறித்து முடிப்பதற்குள்
நின்று நிதானித்து
என்னவென்று கேட்டுவிடுங்கள்
ஒவ்வொருவருக்குமான
ஒன்றை...
அவ்வப்போது
அடிக்கடி
சும்மா சும்மா வருவது
இதோ
இப்போது
இக்கணத்தில் - அது
இறுதியாய்க் கூட
இருக்கலாம்.
- கருவை ந.ஸ்டாலின்