வாசுகி விட்டுச்சென்ற
வாளி அந்தரத்தில்
தொங்கிக்கொண்டிருக்கின்றது…
கிணறு வாளியின் வருகையை
எதிர்ப்பார்த்து இன்றுவரை
காத்துக் கிடக்கின்றது
அழைத்த வள்ளுவன் செவிக்கு
உணவில்லாத நேரத்தில் வயிறு
முட்ட தின்றுவிட்டு உறங்கிய
போதும் வாசுகி இன்னும்
வாளியை பிடிக்க வரவேயில்லை…
பாவம் அவள் வானத்தின் அடியில்
உட்கார்ந்து கொண்டு பெய்யென
பெய்யும் மழையை எதிர்ப்பார்த்துக்
காத்துக்கிடக்கின்றாள்…
மழை பொழிந்தால் அவள் பத்தினி
இல்லை என்றால் அவளும் உங்களைப் போல?

செ.கார்கி

Pin It