வாழ்வின் பெரும்பகுதியும்
அதிரதன் மகனாய் வாழ்ந்ததன் அவஸ்தை
அங்க தேசத்தின் அரசனே அறிவான்.
ஆற்றல் இருந்தும்,
ஆர்வம் இருந்தும்,
அங்கீகாரம் கிடைக்காதது
அவனுக்கு எப்போதும் தொண்டை முள் தான்.
அள்ளித் தந்தே
அகக்குறை மாற்றினான்.
பிறருக்கீந்தே
பெரும் வலி போக்கினான்.
எல்லாம் இருந்தும்,
ஏதுமின்றி வாழ்ந்தான்.
அன்பை மட்டுமே
அள்ளிக் கொடுத்து மறைந்தான்.
கர்ணன்களின் வலி
கர்ணன்களே அறிவர்...

- பாலமுருகன் வரதராஜன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.