இது தான் சாக்கென்று ஆளாளுக்கு கடவுளாகிறார்கள்
தடி எடுத்தவன் எல்லாம் கடவுள் தான் போல
கொலை செய்தல் கடவுளின் கொண்டாட்டமோ
சக கடவுளை கொள்ளத் துடிக்கும் கடவுளுக்கு
உள்ளாடைக்குள் சொறி பிடித்திருக்கலாம்
ஒரு சாயலுக்கு ஹிட்லரும் ஒரு சாயலுக்கு ட்ரம்பும்
கடவுளின் கிறுக்கு பிடித்த தேநீர் இடைவேளையோ
வயிற்றைக் குத்தி வர்ணித்தல்
மண்டையை உடைத்து சிரித்தல்
சுற்றி நின்று ஒருவனை அடித்து உதைத்தல்
கடைந்தெடுத்த இந்த கடவுள் அவதாரம் கசக்கி
எறியப்பட வேண்டியவை
நிலை கொள்ளாமையில் பிதற்றி அலைவது பாவச் செயல்
கடவுளை நாய் சங்கிலியிட்டு கட்டி வைத்தல் உத்தமம்
வர வர கடவுளின் முட்டாள்தனம் கூடிக் கொண்டே
போவதை சகிக்க முடியாது
தேவை எனில் கடவுளோடு யுத்தமிடவும் தான் வேண்டும்
மார்க்ஸை துணைக்கு வை
சே விடம் உதவி கேள்
தாடிக் கிழவனிடம் கம்பு வாங்கு
விளங்கியது யாதெனில் சங்கிகள் ஆபத்தானவர்கள்
இன்னொன்றும் விளங்கி விட்டது
கண்டிப்பாக இந்த கூறுகெட்ட கடவுள்
காவி வண்ணத்தில் இருக்க மாட்டார்

- கவிஜி

Pin It