மதிய நேரம்
தூண்டில்காரன் கை கழுவ
பசியாறும் மீன்கள்.

விபத்தில் இறந்தது
ரத்ததானம் பெற வரும் வழியில்
கொசு.

விளம்பரப் பலகை
யாரும் கண்டுகொள்வதாக இல்லை
மார்பகப் புற்றுநோய்.

வறண்ட பூமி
முதல் மழைத்துளியை சேமிக்கிறது
உயரத்தில் தண்ணீர்த் தொட்டி.

ஒற்றுமையாய் ஈக்கள்
ஒன்று கூடி இசைக்கிறது
மாட்டின் கழுத்தில் மணி.

- சாயிராம், தஞ்சாவூர்

Pin It