இத்தனை மணங்கள் 
எனைச் சூழ்ந்துள்ளன என்பது என் நறுமணம் 
விலகியபோதே தெரிகிறது

இத்தனை சுவைகள்
உள்ளதென 
எனது தேமதுரம் இல்லாதபோதே தெளிகிறது

உலகம் எவ்வளவு 
பெரியதென்பது 
என் உலகம் தொலைந்தபோதே புரிகிறது

பல்லாயிரம் சிற்றுயிர்கள் விழியில் படுகிறது 
என் பேருயிர் சென்றபின்னே

என் ஒளி அணைந்ததாலேயே 
துலங்குகிறது 
இருளில் நிறைந்துள்ள 
இனிமை

இழப்பென்பது எப்போதுமே 
துயராயிருக்க வேண்டியதில்லை...
சில நேரங்களில் 
விடுதலையாகவும் இருக்கக்கூடும் ...

- கா.சிவா

Pin It