விழியுறை பனிவிலக்கத்
திராணியற்று
வீழ்கிறது விடியல்கள்
விழியற்றவன் முன்

ஸ்பரிச முகவரியட்டையில்
அடையாளம் தேடியெடுத்தறிகிறான்
கரம் பிடித்து
கடக்க உதவியோரை

ஒலிச்சிற்பத்தின்
நேர்த்திகள்
உணர்த்துகின்றன
எதிர்ப்படும்
நண்பர்களை

தனிமைச் செங்கோல்
நடையென்றாலும்
அடர்வனம் நுழைந்த சிறுவனின்
மிரள்விழிகளை சாலையில்
வரைந்தபடியே செல்கிறது
விழியிழந்தவனின் தூரிகை

- கவிதா

Pin It