இரவின் நீளமெங்கும்
சொற்கள்
அடுக்கி
கட்டமைத்த
பாலத்தில்
உன்னை நானும்
என்னை நீயும்
கடந்தோம்

இப்போதெல்லாம்..

அந்தரத்தில்
அலையும்
ஆதுர சொற்கள்..
உச்சரிப்பை
துறந்த
உதடுகளில்
மோதி
மடிகின்றன…

கடினமாயிருக்கிறது
மடிந்த சொற்களின்
சவப்பெட்டிகள்
அடுக்கி..
உச்சி வெயில்
நிழலளவேயான
இரவைக் கடப்பது 

- சுசித்ரா மாரன்

Pin It