எவ்வளவு அழைத்தும்
செவி சாய்க்காது போன
வார்த்தைகள் பற்றிய
அக்கறை இல்லை!
அத்தனை எழுத்துக்களுக்கும்
முடிவு கிடைப்பது
அதன் நித்திய நுண்ணுணர்வுகளின் வசம்
மட்டுமே ஆகும்!
நீட்சியான உறுதி
அறுதிப் பெரும்பான்மை வார்த்தைகள்
ஒன்றும் இல்லை என்பதெல்லாம்
எதிர்வினைகளின் சரவெடி!
முன்னுரைகளை ரசிக்கும்
அளப்பரிய மனது
பின்னுரைகளை திரிக்கையில்
வார்த்தைகளை வாசம்பிடிக்கும்
மாயம் அளப்பரியது!
துளிர்ப்பின் செயல்களை
நிச்சயப்படுத்துகையில்
வெடித்துச் சிதறும் புராதனம்!
ஆத்மார்த்தமான முடிவு மட்டும்
அச்சடித்த கண்களுடன்
ஒற்றையடிப் பாதையாய்
எப்போதும் நீள்கிறது!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It