புரியாதது அப்படித்தான் 
திறந்திருந்தால் இருக்கட்டுமே 
அடைபட விட்டு விடலாம் 
சுற்றி வந்தாலும் நேர்வழி தான் 
நிம்மதிக்கு முன் பின் மூன்று கண் 
உயிர் சூட்டுக்குள் உடல் கூடு பேரலை 
பேரின்பம் பஞ்சுமிட்டாய் தின்பது
சூட்சுமம் ஒரே ஒரு வெள்ளை முடி மீசையில் 
நாள் பட்ட ஓவியத்தை சீக்கிரம் வரை 
குட்டிச்சுவர் இருக்கட்டும் 
பூனைகள் நடக்க பூனைக் கண்காரி கிடக்க  
புத்தி பேதலித்தவனிடம் 
சிரிக்காதே அழாதே அவனாகு
மிச்சமிருக்கும் வரிகளை 
சுருட்டிக் கொண்டு போ பூ காட்டியது போல 
முத்தமிட்ட பிறகு முக்கால்வாசி 
எட்டிப் பிடித்தது தான் முக்தி 
புல்லாங்குழல் நிர்பந்தம் காற்றுக்கா மூங்கிலுக்கா 
மூச்சுப் பிடித்து ஓடும் முயலுக்கா
புரிந்ததும் அப்படித்தான்....!
 
- கவிஜி
Pin It