கடலில் எரிந்த

கட்டு மரங்களின் சாம்பல் மேடுகளிலிருந்து

எழுகின்ற சூரியன் நீ

தொழுவதற்க்கில்லை

 

நெய்தல் திரிந்து

பாலையாகிறது

தொலையுணரும் கருவி

புயல்களை உனக்கு மட்டும் அறிவிக்கிறது

 

எந்த உரிமையும்

எனக்கில்லை

ஆனால்

அந்நியனுக்கு எல்லாம் சலுகையும்

என்னை நொறுக்கும் துப்பாக்கி உட்பட

எனக்கு 12 கிலோ மீட்டர் உள்வாங்கிக்கொண்ட

கடல்

ஒரு நாள் 5000 மைல்கள் முன்னேறும்

 

உன்

சட்டத்தின் நகலில்

என் நண்டு சிறு நீர்கழிக்கும

- லஷ்மணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.