யாரோ மிதித்துப் போன
மண்டையோட்டுக்கு
சற்று முன்புவரை காலம் இருந்தது

*
வயதான வண்ணத்துப் பூச்சிகள்
என்ன செய்யும்
வாக்கிங் போகும்

*
கழுதை தின்றது போக
மிச்ச போஸ்டரில்
காலில்லாத கழுதைக்காரன்

*
செத்த பிறகு யாரும் அழாதீர்கள்
நான் இருந்தபோது யாராவது
சிரித்தீர்களா...!

*
உணவில்லாத இரவில்
அலுமினிய நிலவை பிராண்டிக்
கொண்டிருக்கிறது நாய்

- கவிஜி

Pin It