இடை நுழைந்த கை
மேலேறினால்
மலைச்சரிவுகள் 
 
கீழிறங்கினால் பள்ளத்தாக்கு 
பசுமை 
 
தொடை உரசும் தொடைகளில் 
தடை இல்லா தவிப்புகள் 
 
புரள நகரும் கட்டில் ஓசை 
உடல் தளர தளர மெட்டி பாஷை 
 
அதிகாலை முளைக்கும் 
கொம்பில் தேன் எடுத்தல் பேரழகு 
 
தென்மேற்கு பருவமழை 
இணைந்திருத்தல் வேறழகு 
இசையென சிணுங்கும் 
சிலை மறைத்த இருட்டு 
 
பிழை சிரிக்கும் காலை என 
இதுவும் ஓர் கனவோ 
 
எல்லாம் இருக்கட்டும் 
மழை நாளில் அம்மா வீட்டுக்கு 
செல்லாதே 
 
பார் மழையோடு மல்லுக்கட்டி 
மாடி சாயத் தடுமாறி 
இக்கவிதையில்
 
மானமும் போகிறது 
மழையும் போகிறது....!
 
- கவிஜி
Pin It