நண்பர்
ஒரு கவிதைத் தொகுப்பு கொடுத்தார்
ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினேன்

பூடகத்தன்மை
இருண்மையுடன் கூடிய அலட்சியம்
வாழ்க்கையின் மீது
அடர்த்தியாகாப் பூசப்பட்ட கசப்பு
கருப்பொருளைச்
சொற்களுக்குள் புதைத்த மர்மம்
மனம் புகுந்த சொற்கள்கூட
எகிறி வெளியே குதித்தோடின

பழத்தை நெருங்கும் போதெல்லாம்
வௌவாலை
விரடியடித்தன கிளைகள்

மரத்தின் உயரமா?
சிறகுகளுக்குப் பலம்
போதவில்லையா?
காரணம் எதுவோ?

ழம் தின்னாமலே
சோர்ந்த சிறகுகளுடன்
திரும்பியது வௌவால் !

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It