உன் எழுத்து பிடிக்காமல்
போய் விட்டது
உன் பெயர் கோபம்
வரவைக்கிறது
உன் புகைப்படம் எரிச்சல்
மிகுந்தது
உன் சமீபத்திய பேட்டி சகிக்க
முடியாதது
கடந்த வாரம் வெளி வந்த
உன் கவிதை சபிக்கப்பட்டது
தேவதையாக நீ ஆனதிலிருந்துதான்
ஆரம்பிக்கிறது
உன் கவிதைக்கும் என்
யாவைக்குமான சிக்கல்
நீ மனுஷியாகவே இருந்திருக்கலாம்...!

- கவிஜி

Pin It