விந்தைமிகு
பூமிச்சிறைக்குள்
வனத்திற்குள்
அடைக்கப்பட்டிருக்கிறோம்
மேலும் தப்பிச்செல்லா வண்ணம்
நினைவுகளும் ஆயுதங்களும்
அபகரிக்கப்பட்டுள்ளன
விரைந்து
பூமியின் விளிம்புப் பகுதிக்குச் சென்று
வெளியேறுவதற்கான
வழியைத் தேட வேண்டும்
அதுவே விடுதலை
அல்லது
வேறு சிறைக்குள் அடைபடுவதற்கான வழி!

- இரா.இராகுலன்

Pin It