சொற்களில் அத்துனை
வகைகளிருக்க நீ
என்னை நோக்கி
வீசுவது என்னவோ
சிவப்பில் தோய்த்த
கூரான
தடித்தவைகளே..
அவற்றையும்
பஞ்சுப்பொதிகளென
உள்ளங்கைகளில்
பிடித்துச் சேர்க்கிறேன்..
விரல்களின்
ரணங்களுக்காகவேனும்
ஒற்றை
முத்தச் சொல்லை
வீசிச்செல்வாயா?

- அருணா சுப்ரமணியன்

Pin It