எனது ஓவியச் சுவரை ஆக்கிரமித்தீர்கள் பரவாயில்லை.
எனது படிக்கும் தெரு விளக்கை உடைத்தீர்கள்...
சாபமிட்டேன்.
எனது பள்ளிக்கூடம்
எனது கல்வி
எனது மாடுகள்
எனது நிலம், நீர், நதி, வயல்கள்
எனது உணவு
எனது ஆடைகள்
எனது வண்ணம்
எனது காதல்
எனது கனவு
எனது யோனி
எனது முலைப்பால்
எனது குருதி
எனது தன்மானம்
எனது சுயமரியாதை
கடைசியாக
எனது கவிதையென
எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டீர்கள்
முண்டிப் பார்த்தேன்
முனகினேன்
புலம்பினேன்
இப்போது
எனது பேனாவையும் தூரிகையையும்
கேட்பதென்பது
பூகம்பச் சுழலின் மையத்தை நெருங்குவதைப் போன்றது
கடலின் அழுத்தத்தை சீண்டிப் பார்ப்பதாகும்
அணுவை வெட்ட வெளியில் உரசிப் பார்க்காதீர்கள்
உங்கள்
கால்களுக்கு சமநிலை குலைந்து விடும்.

- துவாரகா சாமிநாதன்

Pin It