தீங்கென்று தெரிந்தும்
தொடர்ந்து சேற்றை
பூசி கொள்கின்றனர்
ஒன்று கூடி..
சேற்றைத் தவிர்த்து
நிற்கும் ஒருவனிடம்
ஊரோடு ஒத்து வாழ
அறிவுறுத்தப்படுகிறது..
சேற்றில் புரளும்
சீமான்கள்
குடும்பத்தோடு
களித்திருக்க
சுத்தத்தை
சுவாசிப்பவன்
சத்தமின்றி
வெளியேறுகிறான்
சேற்றில் மிதக்கும்
உலகத்திலிருந்து...

- அருணா சுப்ரமணியன்

Pin It