அருகித் திரிகிறேன்
எப்போது என்றால்
எப்போதும்
ஜன்னல் உடைத்தல்
சதுரக் கனவு எனக்கு
சாத்திரம் அழித்தல்
குடித்த பொழுதெனக்கு
இது இப்படி என்றால்
அது அப்படி இல்லை
மிச்சம் எதுதான் கேளுங்கள்
உச்சம் ஒன்றுமில்லை
அதுவும் என்பேன்
சுற்றி கீழ் வரும் போது
ராட்சச ராட்டின வாழ்வு
சிறு மயக்கம்
துக்கம் ஒன்றுமில்லை
இரண்டாகி மறையலாம்
முத்தம் போன்றது தான்
சுளீர் மரணமும்
யுத்தம் வேண்டுமா கத்தும்
குயிலோசையும்
அது தான் போல
பிறகெப்போதாவது நிற்கும்
சிலைக்கு என் உதடு
பொருத்தலாம்
உளறுவது பிடிக்கும்
எனக்கும்
என் போன்ற எதற்கும்....

- கவிஜி

Pin It