பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை
என்று நீ சொன்ன போது
எனது நம்பிக்கை அதிகரித்தே இருந்தது.

அதே வார்த்தையைக் கோர்த்து
அப்படியே பிசகாது
உனக்குச் சொன்ன போது
ஏன் நம்பிக்கை அற்றுப் போகிறது?

அதே சம்பவம்,
அதே இடம்,
அதே புள்ளி,
அதே தருணம்,
ஏன் எனக்கு நம்பிக்கையாகவும்
உனக்கு அவநம்பிக்கையாகவும்
அர்த்தம் பிறக்கிறது?

கந்தலால்
நம்பிக்கையை
கட்டி எழுப்ப முடியாது.
அது எப்போதும் ஓட்டை தான்

முடியுமென்றால்
மீண்டும் பயப்படாமல் இருப்போம்

- கே.முனாஸ்