முந்தைய காலத்தில்
ஒரே வட்டத்தில்
சுற்றியவளை
சந்திக்க நேர்ந்தது..
தற்போதைய
வட்டத்தின் விட்டம்
கணக்கிடப்பட்டது ..
விட்டத்தின் நீளம்
குறித்தே பேசுபவளிடம்
எப்படி புரிய வைப்பேன்
நம் வட்டங்களின்
மையப்புள்ளி
வேறு வேறு என்று?

- அருணா சுப்ரமணியன்

Pin It