பிணைக்கப்பட்ட இரண்டு மாடுகளில்,
ஒன்று விஞ்ஞான மாடு.
மற்றையது நிலவின் கறை.

வயற்பச்சைகளை
அரைவாசி வேலிக்குள்ளால்
துளாவிக்கொண்டு
தின்ன முயற்சிக்கும்
இந்த விஞ்ஞான மாடு அறிந்திராது,
அன்று பாய்ச்சப்பட்ட நீரில்
விசமேறி நெற்கதிர் வரையிலும் சென்றதை...

நிலாவின் கறைகொண்ட மாடு
கட்டவிழ்க்க முயற்சித்தும்
செத்துப்போன விஞ்ஞானத்தை
விட்டு விலகாதிருக்க
இன்னொரு சாவுக்கு
நிலாவிடமே கவிதை கேட்கிறது...

என்ன செய்வது
பிணைப்புகள் விதிவிலக்காகாது என்று
எனது கொள்ளுப் பாட்டி சொன்னதுண்டு...

- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

Pin It