" புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு "
என்றெழுதி
சிகரெட்டை ஒழித்துவிட்டோம்

"புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் "
என்றெழுதி
புகையிலையையும் ஒழித்துவிட்டோம்

" மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு "
என்றெழுதி
மதுவையும் ஒழித்துவிட்டோம்

பிறகென்ன " பாலிதீன் " பைகள்
மேலேயும் " பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் "
என அச்சடியுங்கள்
பாலிதீனையும் ஒழித்துவிடலாம்.

Pin It