காற்றடித்த திசை நோக்கிப்
பறந்து சென்ற
என்
கனவுகள் அத்தனையையும்
மீண்டும் என்னிடம்
அழைத்துக் கொள்ள மனமின்றி
அப்படியே விட்டு விட்டேன்..
இனி
இன்னொருமுறை காற்று வீசக்
காத்திருக்கிறேன்
கனவுகள் சென்ற திசைநோக்கி..
என் கனவுகளோடு
வண்ணங்கள் இல்லையெனில்
இனி எனக்குக்
கனவுகள் தேவை இல்லை
வண்ணங்கள் போதும் ..
இதுவரையில்
கண்ட கனவுகளுக்கு மட்டும்
எனக்குப் பிடித்த
வர்ணங்களைத் தீட்டிக் கொள்வேன் ..
இன்றோடு
ஒளிந்து கொள்ள
இருக்கிறேன் நான்.
கையோடு சுமந்திருந்த
சிறு விளக்கொன்று
அணைந்து விடுமுன்
சின்ன சின்ன
ஊசி இலைகளின் வேர்களுக்குள்
இன்றிரவோடு
ஒளிந்து கொள்ளவிருக்கிறேன் நான்...

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.