hatred 500

நெருப்பு கங்குகளை
ஒவ்வொருவர் மேலும்
வீசிக் கொண்டுள்ளோம்
ஒருத்தொருக்கொருத்தர்
வீசுவதே
கோபமாக
எரிச்சலாக
வெறுப்பாக
பொறாமையாக
கடுமையாக பற்றி எரிகின்றன
உங்களிலும் என்னிலும்
நெருப்பு
நம் உறவுகளை சாம்பலாக்கி
கொண்டிருக்கிறது
எரிவதையடக்க
ஏதுமறியாது
பூமியை எரித்து
சாம்பலாக்கி
பல் துலக்குகிறோம்
மிச்சத்தை வைத்து
திருநீராக்குகிறோம்
கடைசி வரை
சோறாக்கி
அன்பு சமைக்கப்படவில்லை.

- துவாரகா சாமிநாதன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.