நதியாய் பிரவாகிக்கவும்
நாணலாய் வளையவும்
ஞாயிறாய் ஒளிரவும்
திங்களாய் குளிரவும்
முடியுமாகிறது இந்த மூலதனங்களால்

அவதாரத்தின்
ஆதியிலிருந்து
அடுப்பூதும்
புரிதல்மிகு புல்லாங் குழல்கள்

இசையாகவும், வீணையாகவும்
திரியாகவும், தீபமாகவும்
அணையாமல் 
அகல் விளக்குகளாய்
இருக்க முடிகிறது இந்த
பெண் என்ற பேறு பெற்றதால்

காயங்களிலிருந்து மருந்து செய்யவும்
கண்ணீரிலிருந்து விருந்து செய்யவும்
பழகிய பாத்திரம்
இவளன்றி பூமியில்
இங்கு எவர்?

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It