man sky

கடைசி வரை
நடக்காத கடவுளை
தூக்கியே சுமந்த
திருவிழாவை கேள்விகளோடே
கடந்து விட்டான்
சற்று முன் தொலைந்தவன்....

-------

சலித்து விட்ட புள்ளிக்குள்
பறவைகளாகிவிட்டதாக
நம்பத் தொடங்கிய
செம்மறியாட்டுக் கூட்டத்தில்
கடைசியாக பறந்தவன்
மேய்ப்பவன்...

-------

வழக்கமான
பாதைதான்...
மறந்து விட்டு நினைவு
படுத்திக் கொள்கிறது
வழக்கத்துக்கு மாறானவைகள்...

-------

எனது கவிதைகளை
யார் வேண்டுமானாலும்
ஆரம்பிக்கலாம்...
முடிப்பது கண்டிப்பாக
நான் மட்டும்தான்...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.