நிர்பயாக்களை காப்பாற்ற வராத

பெண் தெய்வங்கள்,

சிம்புக்களை காப்பாற்ற

வந்தாலும் வரலாம்.

 

அறிஞர் பெருமக்களே

 

அனைத்து சாதியினரும் அா்ச்சகா் ஆகலாமா ,

நன்றாக விவாதியுங்கள்...

ஒரு சாதியினா் மட்டுமே துப்புரவாளராக இருக்கலாமா...

என்றேனும் யோசியுங்கள்.....

 

பொங்கல்

 

தமிழர்  திருநாள்

வாசலெங்கும்  ஆங்கில  வாழ்த்துரைகள் !

பொங்கியது பானை மட்டுமா ?

மனசும் தான்...

 

- பிரேமலதா பெரியசாமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.